சிறந்த நடிகருக்கான விருது பெறும் குரு சோமசுந்தரம்

சினிமா

ஆசிய நாடுகளின் திரைப்படங்களுக்கான ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது

2011 ஆம் ஆண்டு வெளியான ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் குரு சோமசுந்தரம்.

இந்த படத்தை தொடர்ந்து, கடல், பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, தூங்காவனம்,  போன்ற பல படங்களில் நடித்தார்.

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் படம்தான் குரு சோமசுந்தரத்தை அடையாளப்படுத்தியது.

இந்தப் படத்தில் குரு சோமசுந்தரத்திற்கு ஜோடியாக நடிகை ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது

எதார்த்தத்துடன் கூடிய எள்ளலும் துள்ளலும் கூடிய வில்லத்தனம் மிக்கது குரு சோமசுந்தரத்தின் திரைமொழி. தமிழ் சினிமாவில் ஊறுகாய் போன்று பயன்படுத்தப்பட்டு வந்த குரு சோமசுந்தரத்தின் திரைமொழியை மலையாள சினிமா முழுமையாக பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆசிய நாடுகளின் திரைப்படங்களுக்கான விருது’ ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ எனும் பெயரில் வருடம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது

இதில் ஆசியா கண்டத்தில் உள்ள பதினாறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிப்படங்கள் கலந்துகொண்டன.

சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில்நுட்ப. கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விருது ‘மின்னல்முரளி’  படத்திற்காக அவருக்கு வழங்கப்படுகிறது. 2022 டிசம்பர் மாதம்  விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது.

ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத்துரையை சார்ந்தவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

இராமானுஜம்

திமுக தலைமைக் கழக தேர்தலை நடத்தும் ஆற்காடு வீராசாமி: யார் இந்த சூப்பர் சீனியர்?

யுவன் இசை நிகழ்ச்சி : 5 பேர் காயம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.