தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (அக்டோபர் 17) டெல்லியில் நடைபெற்றது.
திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது.
கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இவ்விருதுகள் வழங்கப்படவில்லை.
2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லியில் நடைபெற்ற 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவித்தார்.
விருது பெற்றவர்களை இங்கே காணலாம்
சிறந்த நடிகர்- அல்லு அர்ஜுன் (புஷ்பா: தி ரைஸ்)
சிறந்த நடிகை விருது இருவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகை – ஆலியா பட் (கங்குபாய் கத்தியவாடி)
சிறந்த நடிகை – கீர்த்தி சனோன் (மிமி),
சிறந்த படம் – மாதவனின் ‘ராக்கெட்ரி’
சிறந்த இசையமைப்பாளர்- எம்.எம்.கீரவாணி (ஆர்.ஆர்.ஆர்)
புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.
பொழுதுபோக்கு அல்லாத பிரிவில் கருவறை படத்திற்காக ஸ்ரீகாந்த தேவாவுக்கும் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட இந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு சினிமாத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இரவின் நிழல் ‘மாயவா தூயவா’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது ஸ்ரேயா கோஷலுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படம் – ஆர் ஆர் ஆர் – ராஜமவுலி
வைரலாகும் பிரபலங்களின் புகைப்படங்கள்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
பிரியா
தடை விதித்த நீதிமன்றம் : அக். 19ல் ‘லியோ’ வெளியாகுமா?
அடுத்த 7 தினங்கள்… மறக்காமல் குடை எடுத்துட்டு போங்க : எங்கெங்கு மழை?