நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ, 12 நாட்களில் 540 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
லியோ படத்தின் இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று (நவம்பர் 1) சென்னை உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
இந்த வெற்றி விழா மேடையில் மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் நடிகர் விஜய் குறித்தும் லியோ படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இவர்களைத் தொடர்ந்து லியோ படத்தின் வெற்றி விழா மேடையில் பேசிய நடிகர் அர்ஜுன், “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நடிகர் விஜய்க்கு அதிகமாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் அவர் அரசியலுக்கு வந்து விடுவார்” என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகர் அர்ஜுன் விஜய்யிடம், விஜய்யா இருப்பது கஷ்டமா? ஈசியா? என்று கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கு “வெளியில் இருந்து பார்க்க கஷ்டம் தான். ஆனால் உள்ள ஈசி தான். அதற்கு காரணம் ரசிகர்கள்” என்று நடிகர் விஜய் பதில் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
நெல்லையில் கொடூரம்: பட்டியலின இளைஞர்கள் தாக்கிய 6 பேர் கைது!
ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எடுத்து கொள்ளவேண்டிய காய்கறிகள்!