மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் இன்று (ஜனவரி 27) நல்லடக்கம் செய்யப்பட்டது.
இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோய்க்காக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இலங்கையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடல் இன்று காலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. தேனி லோயர் கேம்பில் உள்ள பண்ணை வீட்டில் இன்று காலை முதல் பவதாரிணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் பவதாரிணிக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர். இயக்குநர் பாரதிராஜாவும் நேரில் வந்து பவதாரிணிக்கு கதறி அழுதபடியே கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பவதாரிணி உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இதையடுத்து அவருக்கு மிகவும் பிடித்த பச்சை நிற பட்டுச்சேலை போர்த்தப்பட்டது.
இறுதிச்சடங்கின் போது, உறவினர்கள் சுற்றி நின்று, “மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடலை பாடினர். பின்னர் பவதாரிணியின் உடல் இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் நினைவிடங்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
இந்த 5 வீரர்களும் ஐபிஎல்ல ஆடுறது ரொம்ப கஷ்டம்… வெளியான புதிய தகவல்!
“ராமரை ஏமாற்றினால் தண்டிக்கப்படுவார்கள்” : பாஜக மீது கே.பி.முனுசாமி தாக்கு!