பிக் பாஸ் சீசன் 7 தொலைக்காட்சி ரியாலிட்டி தொடரில் பங்கேற்ற எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான விக்ரமின் விமர்சனமே இதற்கு காரணம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. எந்த சீசனிலும் இல்லாத ’இரண்டு வீடு’ கான்செப்ட், அதாவது பிக் பாஸ் – ஸ்மால் பாஸ் கான்சப்ட் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாரா வாரம் பிக் பாஸ் வீட்டில் குறைவான ஈடுபாடு உள்ள 6 நபர்களைத் தேர்ந்தெடுத்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அந்த வார வீட்டின் கேப்டன் அனுப்பி வைப்பார்.
அதன் படி, முதல் வாரமே அந்த லிஸ்ட்டில் பவா செல்லதுரை இடம்பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கேப்டனான விக்ரம், மீண்டும் பவா செல்லதுரையை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில் ‘சோம்பேறி’ என்கிற பட்டத்திற்கு ஏற்ற ஆளாக பவா செல்லதுரையை தேர்வு செய்தது அவர் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளதாம்.
இதைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டின் கன்ஃபஷன் ரூமிற்கு சென்ற பவா செல்லதுரை,
‘இந்த வீட்டிற்குள் நான் வருவதற்கு முன், நிச்சயம் உள்ளே பல சூழ்ச்சிகள் இருக்குமென எதிர்பார்த்தேன். ஆனால், இங்கு அதோடு சேர்த்து வன்மங்களும் நிறைந்திருக்கிறது.
இதற்கு மேல் என்னால் இதில் தொடர முடியாது. இவர்கள் கொடுக்கும் டாஸ்க்களைச் செய்ய எனது உடல் நிலை ஒத்துழைக்காது “ என்று கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளாராம்.
பிக் பாஸ் போட்டியில் எழுத்தாளர் பவா செல்லதுரை பங்கேற்கவுள்ளார் என்கிற அறிவிப்பு வந்தது தொட்டே பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கின.
இந்நிலையில், தற்போது அவரே முன் வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றைய பிக் பாஸ் எபிசோடில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
அரியலூர் பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு: வானதி சீனிவாசன்