முதலிடத்தில் இந்தியப்படம் : தனக்கு பிடித்த படங்களின் பட்டியலை வெளியிட்ட ஒபாமா

Published On:

| By Minnambalam Login1

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தாண்டில் வெளிவந்து தனக்கு பிடித்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஜெர்மனி, அமெரிக்கா, தைவான் என்று பல நாடுகளின் படங்கள் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் இந்தியாவின் ‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ (All We Imagine as Light) படத்தின் பெயரை ஒபாமா முதலில் குறிப்பிட்டுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த பட்டியலில் ‘கான்கிலேவ்’, ‘தி பியானோ லெஸன்’, ‘தி பிராமிஸ்ட் லேண்ட்’, ‘தி சீட் ஆஃப் தி சேக்ரட் ஃபிக்’, ‘டியூன்-2’, ‘அனோரா’, ‘டிடி’, ‘சுகர்கேன்’ மற்றும் ‘அ கம்ப்லீட் அன்னோன்’ படங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ திரைப்படத்தை புனே திரைப்பட கல்லூரியில்(Film and Television Institue, Pune) பயின்ற பாயல் கபாடியா இயக்கினார். இந்த ஆண்டு(2024) நடந்த கான்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ‘கிராண்ட் ப்ரி’ விருதை இத்திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் கடந்த 30 ஆண்டுகளில் கான்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலின் முக்கிய போட்டி பிரிவில் விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு பாயல் கபாடியா சொந்தக்காரர் ஆனார்.

மேலும் கடந்த வாரம் கேரளா திருவனந்தபுரத்தில் நடந்த 29வது சர்வதேச திரைப்படவிழாவில் பாயல் கபாடியாவுக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் சினிமா’ விருது வழங்கப்பட்டது.

‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ திரைப்படம் மும்பையில் பணிபுரியும் இரண்டு கேரளாவை சேர்ந்த செவிலியர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது.

இந்தப் படம் 2025 கோல்டன் குளோப்ஸ் விருது விழாவுக்காக இரண்டு பிரிவுகளிலும், கிரிடிக்ஸ் சாய்ஸ் விருது விழாவில் ஒரு பிரிவிலும் தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

நீதிமன்றத்தில் இளைஞர் வெட்டிக் கொலை : டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு!

”என்ன மாதிரியான மனிதர் அவர்?” : அல்லு அர்ஜூனை சட்டமன்றத்தில் விளாசிய தெலங்கானா முதல்வர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share