கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநர் ஜெயதீர்த்தாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’.
காதலை முன்னிலைப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை என்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.
இந்துக்களின் புனித ஸ்தலமான காசியை கதைக் களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி உள்ளது.
தற்போது ‘பனாரஸ்’ திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமானுஜம்