“நடிகை சன்னி லியோன் பால்கோவா ஊட்டியது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது” என்று டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து கூறியுள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து இன்று (நவம்பர் 7 ) கலந்து கொண்டார்.
அப்போது, பேசிய அவர் “டிக் டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு வரும் கடிதங்கள் குறித்து வீடியோ போட்டதுதான் எனக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
திரைத்துறையில் எனக்கு சிறந்த ஒத்துழைப்பை தருகின்றனர். பிக்பாஸ் தொடரில் பங்கேற்ற அனுபவம் சிறப்பாக இருந்தது. பிக்பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிகப்பெரும் பாக்கியம்.

என் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிக்பாஸை விட்டு வெளியேறினேன். தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.
நடிகை சன்னி லியோனுடன் திரைப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. அவர் எனக்கு பால்கோவா ஊட்டி விட்டது மிகவும் பிடித்திருந்தது.
நான் அவரைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ கூறியவுடன், அவர் என்னை பார்த்து ‘கியூட்’ என கூறிய போது சந்தோசப்பட்டேன்” என்றார்.

கோவையில் யூ-ட்யூபர் டிடிஎஃப் வாசன் உடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது குறித்த கேள்விக்கு, “இதுவரை தான் யாருடனும் அதுபோன்ற வேகத்தில் சென்றதில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன்” என்றார். மேலும், கருப்பட்டிக்கு எனது ஊர் பிரபலமானது என்றும், தற்போது ஜி.பி. முத்து என்ற என் பெயரால் தனது ஊர் பிரபலமாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
‘ஓ மை கோஸ்ட்’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சதீஷ், நடிகை தர்ஷா குப்தா, சஞ்சனா, தங்கதுரை, திலக் ரமேஷ் ஆகியோருடன் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சன்னி லியோன் சென்னை வந்திருந்தார். அந்த விழாவில் பேசிய ஜி.பி.முத்து, ”சன்னி லியோனை இதற்கு முன் (அதாவது இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு) எனக்கு தெரியாது” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இமாச்சல் தேர்தல்: நாளை கார்கே பிரசாரம்!
10% இடஒதுக்கீடு: உமா பாரதி வரவேற்பு!