‘அகண்டா – 2’: பாலய்யாவின் சம்பளம் இவ்வளவா?

Published On:

| By Minnambalam Login1

Balayya's 'Aganda - 2' coming soon

அகண்டா-2 திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் பாலகிருஷ்ணா தனது முந்தைய படத்தை விட 66% கூடுதலாக சம்பளம் கேட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் பாலகிருஷ்ணா. ஒற்றை விரலில் ரயிலை நிறுத்துவது, புவி ஈர்ப்பு சக்தியோடே போட்டி போடுவது என மசாலா நெடி தூக்கும் இவரது கமர்சியல் படங்களின் காட்சிகள் தமிழ் ரசிகர்களிடத்தும், நெட்டிசன்கள் மத்தியிலும் பிரபலம்.

இவர் நடிப்பில் 2021ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த மிக முக்கிய திரைப்படம் ‘அகண்டா’. வெகு நாட்களுக்கு முன்னரே இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து இயக்குநர் போயபதி சீனு – பாலகிருஷ்ணா அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வந்த நிலையில், தற்போது ‘அகண்டா – 2’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நேற்று(அக்டோபர் 16) ஹைதராபாத்தில் நடைபெற்றது. பாகம் – 1 இல் பணிபுரிந்த அதே தொழில்நுட்பக் கலைஞர்களே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளனர்.

தனது 109ஆவது படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம்  வாங்கிய நடிகர் பாலகிருஷ்ணா, அகண்டா-2 படத்திற்காக ஏறத்தாழ ரூ.33 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று திரைத்துறை வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

இந்தக் கதை சென்ற பாகத்தின் தொடர்ச்சியா, அல்லது புதிய கதையா என்பதைப் படக்குழுவினர் இன்னும் உறுதிசெய்யவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ககன மார்கன்’!

”அதிமுக பிரிந்துவிட்டதுனு இனி சொல்லாதீங்க” : எடப்பாடி ஆதங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel