பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் நடிகர் விஷ்வக் சென் நடிப்பில் வரும் மே 31ஆம் தேதி ரிலீசாக உள்ள படம் கேங்ஸ் ஆப் கோதாவரி.
இந்த படத்தில் அஞ்சலி, நேஹா ஷெட்டி, நாசர், சாய்குமார், ஹைப்பர் ஆதி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், சமீபத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா (பாலைய்யா) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழா மேடையில், நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை திடீரென தள்ளிவிட்ட சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Rugged Boy 😎 pic.twitter.com/FXuLmzrfmv
— Karthik Ravivarma (@Karthikravivarm) May 29, 2024
நடிகை அஞ்சலி மேடையில் இருந்தபோது அவர் அருகில் வந்த பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிவிட்டு இருக்கிறார்.
உடனே பதறிப் போன அஞ்சலி என்ன சொல்வது என தெரியாமல் சிரிப்பது போல சமாளித்து மேடையில் அமைதியாக நின்று கொண்டார். பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிவிட்ட சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த நடிகை நேஹா செட்டி, அஞ்சலி தடுமாறும் போது அவரை தாங்கி பிடித்து உதவினார். ஆனால் அவரும் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே அந்த நொடியை சமாளித்து கடந்து விட்டார்.
நடிகர் பாலகிருஷ்ணா விளையாட்டுக்காக தான் அஞ்சலியை தள்ளிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தாலும், பாலகிருஷ்ணாவின் இந்த செயலுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம்!
சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவை: தவிர்ப்பது எப்படி?
வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!
ஹெல்த் டிப்ஸ்: மகிழ்ச்சியாகத் தூங்கச் செல்லுங்கள், உங்களின் இறப்பு தள்ளி வைக்கப்படும்!