‘பகாசூரன்’ : பக்திப் படமா? அரசியல் படமா?
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் ஜாதி பிரச்சினைகளை பேசும் இயக்குனராக பிரபலமானவர் மோகன்.ஜி.
இவரது ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’.
இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய சூரன் கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் நடிக்கிறார்.
கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 24) படத்தில் இடம் பெறும் ‘சிவ சிவாயம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது.
இசை மேதை பாபநாசம் சிவன் எழுதிய ‘சிவ சிவாயம்’ என்ற அந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
ஜானி மாஸ்டர் நடன அமைப்பில் ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவில் செல்வராகவன் நடித்திருக்கும் அந்தப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக் கணக்கானபார்வையாளர்களை கடந்துமெகா ஹிட் அடித்துள்ளது.
வழக்கமாக நாடக காதல், ஜாதி பிரச்சினைகளை மையமாக கொண்டு படம் இயக்குகிறவர் நீங்கள் “பகாசூரன்” பக்திப்படம் போல தெரிகிறதே என்றபோது.
“சமூகத்தில் நடப்பதைதான் திரைப்படமாக எடுத்தேன். அதனை ஜாதிப்படமாக உருவகப்படுத்திக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.
பகாசூரன் படமும் அந்த மாதிரியான படம்தான். இந்திய அரசியலே மதம், கடவுள் நம்பிக்கை என்பதை சுற்றியே வருகிறது.
எனது படம் நாட்டில் நடப்பதை எந்த ஒரு அரசியல் சார்பும் இன்றி நடுநிலையுடன் பதிவு செய்திருக்கிறது” என்றவர்
‘சிவ சிவாயம்..’ பாடல் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி சிவ பக்தர்களையும் பரவசப்படுத்தி வருகிறது.
குறிப்பாக சிவனடியார் போன்ற தோற்றத்தில் ”என் அப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா…” என்று சிவலிங்கம் முன்பு கைகளை விரித்தபடி செல்வராகவன் அந்த பாடலை பாடும்போது, அதனை கேட்கும் சாமான்யன் கூட மேனி சிலிர்த்து உருக முடிகிறது.
பெருநகரங்கள் மட்டுமின்றி கடைக்கோடி கிராமம் வரை ‘சிவ சிவாயம்’ பாடல் சென்றடைந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கிறங்கடித்து ‘பகாசூரன்’ படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது” என்றார்.
இராமானுஜம்
அமெரிக்காவில் சாதனை படைத்த ’பொன்னியின் செல்வன்’!
வேலைவாய்ப்பு : பாரத ஸ்டேட் வங்கியில் பணி!