விமர்சனம்: பேட்ஆஸ் ரவிக்குமார்

Published On:

| By uthay Padagalingam

Badass Ravikumar review

‘தசாவதாரம்’ இசையமைப்பாளரின் நாயக அவதாரம்!

’தசாவதாரம்’ படத்தின் மூலமாகத் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிமேஷ் ரேஷமய்யா. தேரே நாம், ஆஷிக் பனாயா அப்னே உட்படப் பல ஹிட் ஆல்பங்கள் தந்தவர். Badass Ravikumar review

நம்மூர் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்று இவர் நாயகனாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் பத்தாவதாக வெளியாகியிருக்கிறது ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’. இப்படத்திற்கு இசையமைத்திருப்பதோடு, இதன் கதை திரைக்கதையிலும் பங்களித்திருக்கிறார்.

எல்லாம் சரி, இந்த படத்திற்கு ஏன் இப்படியொரு டைட்டிலை வைத்தார்? ‘தசாவதாரம்’ படத்தின் இயக்குனர் பெயரைத் தான் ஏற்கும் பாத்திரத்திற்குச் சூட்டும் அளவுக்கு அவர் மீது அபிமானம் கொண்டிருக்கிறாரா? இதற்கான பதில் ஹிமேஷ் ரேஷமய்யாவுக்கே வெளிச்சம்.

கடத்தல்காரர்களைத் துரத்தும் காவல்துறை அதிகாரிகளை மையப்படுத்திப் பல திரைப்படங்கள் எழுபது, எண்பதுகளில் வெளியாகியிருக்கின்றன. ரொமான்ஸ், காமெடி, சென்டிமெண்ட் என்று பல அம்சங்கள், ’தயிர்வடையில் தூவப்பட்ட காராபூந்தி போல’ அக்கதையில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும். Badass Ravikumar review

அவ்வாறு அமைந்த திரைப்படங்களை ஒரேநேரத்தில் ‘ஸ்ஃபூப்’ செய்யும்விதமாகவும், அவற்றுக்கு ‘ட்ரிப்யூட்’ செய்யும்விதமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’. டைட்டிலை தமிழில் உச்சரிக்கச் சிரமப்படுபவர்கள், அந்த இடங்களில் ‘badass ravikumaar’ என்பதனை நினைவில் கொள்ளலாம். Badass Ravikumar review

இப்படம் தரும் அனுபவம் எப்படிப்பட்டது? Badass Ravikumar review

என்ன ’பெரிய’ கதை!? Badass Ravikumar review

‘கதை என்ன பெரிய கதை, இப்ப வர்ற படங்கள்ல இருந்து அங்கங்க சில சீன்களை பிய்ச்சி ஒண்ணா சேர்த்தா போதாதா’ என்ற பேச்சை அரிதாகச் சிலர் கேட்டிருக்கலாம். அதனை ரசிகர்கள் சொல்லும் வகையில் ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’ திரைக்கதையை குஷால் வேத் பக்தி உடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் நாயகன் ஹிமேஷ் ரேஷமய்யா.

நாட்டின் முக்கிய அனுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட சில ரகசியங்கள் அடங்கிய ‘டேப்’ ஒன்றை லவட்டுகிறது ஒரு கடத்தல் கும்பல். அந்த டேப்பை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லவும் முயல்கிறது. சர்வதேச விவகாரம் என்பதால் பலரும் அதனைத் தங்களுடையதாக்க விரும்புகின்றனர்.

இதற்கிடையே, அதனைத் தடுத்து நிறுத்த ஒரு சாகசக்காரர் இந்திய அரசால் நியமிக்கப்படுகிறார். அவர்தான் இப்படத்தின் நாயகன் என்பதை நாம் அறிவோம்.

அந்த டேப் யாரிடம் உள்ளது, அதனை அடைவது எப்படி என்பதை நாயகன் கண்டறிந்தாரா, தனது மிஷனில் வெற்றி பெற்றாரா என்பதே ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’ படத்தின் மீதிக்கதை. கிளைமேக்ஸில் என்ன நிகழும் என்பதை யூகிக்க முடியுமென்றால், இந்த படத்தைக் காண்பதிலும் உங்களுக்குச் சிரமம் இருக்காது.

Badass Ravikumar review

சில சிறப்பம்சங்கள்! Badass Ravikumar review

இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா தான் நாயகனாக நடித்த படங்களில் இசை வித்வானாகத் தோன்றினால் நாம் தெறித்துவிடுவோம். அதனை உணர்ந்தோ என்னவோ, போலீஸ் பாத்திரத்தில் தோன்றி இதில் ‘ஹீரோயிசம்’ காட்டியிருக்கிறார். ‘ஸ்பூஃப்’ வகைமை படம் என்பதால் அது பற்றிப் புலம்பவிடாமல் ரசிகர்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்.

நாயகியாக சிமோனாவும் கீர்த்தி குல்ஹரியும் வந்து போயிருக்கின்றனர். இருவரில் கீர்த்தி அதிக மதிப்பெண்களை அள்ளுகிறார்.

முப்பதுகளைக் கடந்த ப்ளஸ் சைஸ் பியூட்டியாக இருவரையும் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் கெய்த் கோம்ஸ். ‘இதுவும் ஸ்பூஃப்’ஓ’ என்று தெனாலி கமல் பாணியில் நம்மைக் கேட்க வைத்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் கவர்ச்சி காட்டினால் போதாது என்று இரண்டு பாடல்களுக்காக சன்னி லியோனையும் அழைத்து வந்திருக்கிறார்.

இப்படத்தின் சிறப்புகளில் தலையாயது, இதில் பிரபுதேவா வில்லனாகத் தோன்றியிருக்கிறார் என்பதே. கார்லோஸ் பெட்ரோ பாந்தர் எனும் பாத்திரத்தில் அமர்க்களம் செய்திருக்கிறார்.

இவர்களோடு ஜானி லீவர், சஞ்சய் மிஸ்ரா, ராஜேஷ் சர்மா, பிரசாந்த் நாராயணன், சௌரஃப் சச்தேவா உட்படப் பலர் இதிலுண்டு.

மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு, சுனில் ஜெய்ஸ்வாலின் தயாரிப்பு வடிவமைப்பு, ராமேஷ்வர் பகத்தின் படத்தொகுப்பு ஆகியன இயக்குனர் கெய்த் கோம்ஸின் காட்சியாக்கத்திற்கு துணை நின்றிருக்கின்றனர்.

இப்படத்தின் விஎஃப்எக்ஸ் கூட எண்பதுகளில் வெளியான படங்களைப் பிரதியெடுக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது.

தியேட்டரில் இப்படத்தைக் கண்டபோது, ‘இருக்கலாமா, எழுந்து செல்லலாமா’ என்று சிலர் திணறியதைக் காண முடிந்தது. அவர்களது தயக்கத்தை உடைத்தெறியும் பணியைச் செய்தன ஹிமேஷ் ரேஷமய்யா இசையமைத்த பாடல்கள்.

’ஹூக்ஸ்ட்காப் ஹூக்கா பார்’, ‘பஜார் இ இஷ்க்’, ‘தந்தூரி டேஸ்’, ’தில் கே தாஜ்மஹால் மெய்ன்’ என்று அடுத்தடுத்து ஹிட் ரகத்தில் ராகங்கள் தந்திருக்கிறார். படத்திற்கான பின்னணி இசையை எண்பதுகளில் வெளியான இந்தி திரைப்படங்களைக் கிண்டலடிக்கும் வகையில் அமைந்திருக்கிறார்.

Badass Ravikumar review

நீளமான தலைமுடியோடு தோன்றும் வகையில் ‘விக்’ ஒன்றை அணிந்து வருகிறார் ஹிமேஷ் ரேஷமய்யா. அவரது நடிப்போ, குரலோ நம்மை பெரிதாக வசீகரிக்கவில்லை என்றாலும், அவை எரிச்சலூட்டும் வகையில் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

முக்கியமாக, இந்த படத்தில் அவர் பேசுகிற வசனங்கள் எல்லாமே ‘பஞ்ச் டயலாக்குகள்’ தான். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் கூட இப்படி வசனம் பேசி நாம் பார்த்ததில்லை. அந்தவகையில், இப்படத்திற்காக பண்டி ரதோர் எழுதியிருக்கும் வசனங்கள் ‘இந்தி மீம்ஸ்’ உலகில் இனி பெரிய ரவுண்ட் வரும்.

‘இந்த படத்துல ஹிட் சாங்ஸ் இரிக்கி. பைட் இரிக்கி. ஹீரோயின்ஸோட கிளாமர் ஆக்டிங் இரிக்கி. எய்ட்டிஸ் மூவி மாதிரி காமெடி இரிக்கி. சீன்ஸ் கூட அதே மாதிரி இரிக்கி. மொத்தத்துல சூப்பர்ஹிட் படம் பார்க்கிற எக்ஸ்பீரியன்ஸ் இதுல இரிக்கி’ என்று ‘வாரிசு’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அதன் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை ‘ஸ்பூஃப்’ செய்கிற வகையில் அமைந்திருக்கிறது இதன் உள்ளடக்கம்.

’பொழுதுபோக்கா படம் பார்க்க இது போதுமே’ என்பவர்கள் தாராளமாக ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’ பார்க்கலாம். மற்றவர்கள், இந்த விமர்சனத்தைப் புறந்தள்ளலாம்! ass Ravikumar review

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share