கையில் சிகரெட்டுடன் ‘தெய்வ திருமகள்’ பேபி சாரா

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா தற்போது நடித்துள்ள புதிய படத்தின் டீசரில் சிகரெட் பிடிக்கும் காட்சி பலரின் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பேபி சாரா.

அந்தப்படத்தில் அவர் குழந்தை நட்சத்திரம் என்றாலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் நிலா என்ற கதாப்பாத்திரத்தில் பேபி சாராவின் மழலைக் கொஞ்சும் நடிப்பு அப்பா – மகளுக்கு இடையேயான ஆழமான பாசத்தை அழகுடன் எடுத்துக்காட்டியது.

அதன்பின்னர், சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

baby sarah smoking in Quotation Gang teaser

அத்துடன் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சிறுவயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கொள்ளை கொண்டார் பேபி சாரா.

தற்போது பிரபல பெண் இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கி வரும் மின்மினி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே பேபி சாரா நடித்துள்ள கொட்டேஷன் கேங் திரைப்படத்தில் பிரியாமணி, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், சாரா அர்ஜுன், விவேக் கண்ணன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் பேபி சாரா இடம்பெறும் ஒரு சில காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

baby sarah smoking in Quotation Gang teaser

அதாவது கையில் சிகெரெட்டை புகைத்தபடி அவர் நடித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பேபி சாரா தானா இது? என்று ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். இதனையடுத்து பலரும் அவருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

1300 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை : துருக்கிக்கு தோள் கொடுக்கும் இந்தியா

எல்லாமே மறந்திருச்சு…மனசும் வெறுமையாச்சு – கலங்கிய பானுப்ரியா

ஜிகிர்தண்டாவில் தவளை: கடை உரிமையாளர் கைது!

+1
1
+1
3
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *