அட்லி இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது ‘தெறி’ இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க ஜியோ ஸ்டுடியோஸ், அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்து வருகின்றன.
Ayaa #babyjohn ⚡️⚡️⚡️
In cinemas worldwide 31st may 2024 https://t.co/XQoIj9KRe4— VarunDhawan (@Varun_dvn) February 5, 2024
தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை, நடிகர் ஜீவாவின் ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் ‘தெறி’ இந்தி ரீமேக்கின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் ‘பேபி ஜான்’ என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
டைட்டில் அறிவிப்பை முன்னிட்டு மாஸான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த Glimpse வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் வருண் தவானின் 18-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உச்ச நீதிமன்ற உத்தரவு… சூமோட்டோ வழக்குகளை ஒத்திவைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
“தமிழ்நாட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன்” ஸ்பெயினில் ஸ்டாலின் பேச்சு!