தமிழ் மற்றும் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அனிகா, மலையாள உலகில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.
நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானவர் பேபி அனிகா. மலையாளத்தில் 5 சுந்தரிகள், பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
இவர் அவரது ரசிகர்களால், செல்லமாய் ‘குட்டி நயன்’ என அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா அடுத்ததாக ஹீரோயின் ரோலில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
ஹீரோயின் வாய்ப்புக்காக இதுவரை யாரும் பார்த்திடாத நியூ லுக்கிற்கு மாறி லேட்டஸ்ட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.
சமீபத்தில்கூட இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குநர் மணி நாகராஜ் இயக்கத்தில் உருவாகும், ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தில், அனிகாவுடன் இணைந்து மற்ற மூன்று பெண்களும் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இதில், நடிகை அனிகா, 17 வயதிலேயே கர்ப்பணிப் பெண்ணாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அனிகா, ஹீரோயினாக வாய்ப்பு தேடி வந்தநிலையில், அவருக்கு அந்த வாய்ப்பு முதன்முறையாக மலையாள உலகில் கிட்டியிருக்கிறது. ’ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில், அவர் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்.
இந்தப் படத்தை ஆல்ஃப்ரெட் சாமுவேல் இயக்குகிறார். இந்தப் படத்தில் முகேஷ், விஜய ராகவன், லேனா, ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஷான் ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இதன்மூலம் அவருடைய ஹீரோயின் கனவு நிறைவேறியிருக்கிறது. இந்தப் படம் மூலம் தொடர்ந்து தமக்கு பல ஹீரோயின்கள் வாய்ப்பு வரும் என்று அனிகா நம்புகிறார்.
ஜெ.பிரகாஷ்