ஊட்டிக்கு தனியாத்தான் போகனும் போல… பப்லு காதலித்த பெண்ணுக்கு திருமணம் முடிந்தது!

Published On:

| By Kumaresan M

சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். 57 வயதான இவர் தனது மனைவியை பிரிந்து ஷீத்தல் என்ற பெண்ணுடன் காதலில் இருந்தார். ஷீத்தலுக்கு 23 வயதுதான் ஆகியிருந்தது. பப்லு 23 வயது பெண்ணுடன் காதலில் இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில், அவர்களுக்குள் என்ன பிரச்னை ஏற்பட்டதோ திடீரென இருவரும் பிரேக்அப் செய்து பிரிந்துவிட்டனர்.

தொடர்ந்து, ஷீத்தலுக்கு திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்திருக்கிறது. அவர் தனது திருமண போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

சுமேஷ் சோமசேகரன் என்பவருடன் ஷீத்தலுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்து ஷீத்தல் இன்ஸ்டா தளத்தில் கூறியிருப்பதாவது,

‘எப்போதும் நமது பிரார்த்தனைகளை கடவுள் கேட்பார். கடவுள் உங்களுக்காக எப்போதும் நல்ல திட்டம் போட்டு வைத்திருப்பார்.

நாமெல்லாம் கடவுளின் குழந்தைகள். உங்களுக்கு நடக்கவுள்ள நல்ல விஷயங்களை கடவுள் பார்த்து பார்த்து செய்வார்.

கடவுள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அவர் நிகழ்த்தும் மேஜிக்கை பார்த்த அனுபவங்களும் எனக்கு உண்டு. வருங்காலத்தில் நாங்கள் இருவரும் நல்லபடியாக வாழ கடவுள் எங்களை ஆசிர்வதித்துள்ளார்.

இன்று முதல் என் வாழ்க்கையில் நல்லதோ கெட்டதோ ஏழையோ பணக்காரரோ வாழ்வோ சாவோ… காதலை இறப்பு வரை நான் போற்றுவேன்.

என் வாழ்க்கையின் மிகவும் தெய்வீகமான மறக்கமுடியாத தருணம் இது. என் அன்பானவனே, என் நண்பனே, என் நலம் விரும்புபவனே, உன்னுடைய மிகப் பெரிய ஆதரவைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி” என ஷீத்தல் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஷீத்தலுடன் காதல், அது பற்றி பப்லு அளித்த பேட்டி ஆகியவற்றால் கடுப்பாகியிருந்த நெட்டிசன்கள், இப்போது, ‘பப்லு ஊட்டிக்கு தனியாத்தான் போகனும் போல’ என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.குமரேசன்

‘என் ஆன்மா ஒரே இடத்தில் இருக்காது’ – தாய்லாந்தில் இருந்து திரிஷா போட்ட போஸ்ட்!

‘எங்களுக்கு வேண்டாம், தெலுங்கு சினிமாவை ஆந்திராவுக்கு கொண்டு போங்க’ – அடுத்த பரபரப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share