இளைஞர்களை கவர்ந்ததா “பாபா”

சினிமா

ரஜினிகாந்த் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்த் படத்தை தயாரித்தும் இருந்தார்.

அண்ணாமலை, வீரா, பாட்ஷா, படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்கினார் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வெளியான சமயத்தில், பாட்டாளி மக்கள் கட்சி வட மாவட்டத்தில் திரையரங்குகளுக்கு சென்னையில் இருந்து பஸ்ஸில் அனுப்பப்பட்ட படச்சுருள் பெட்டியை பறிமுதல் செய்தது. பாமகவிற்கு எதிராக ரஜினிகாந்த் அரசியல் அரங்கில் பேசியதால் இந்த நடவடிக்கையை பாமக மேற்கொண்டது. அதனையும் கடந்து பாபா படம் தமிழ்நாடு முழுவதும் 318 திரைகளில் வெளியானது.

வணிக ரீதியாக பாபா வெற்றி பெறவில்லை என அப்போதும், இப்போதும் செய்திகள் வெளியானது. ஆனால் பாபா படத்தின் மீதான அதிகபட்ச எதிர்பார்ப்பு காரணமாக திரையரங்குகளில் கூடுதலாக முன் தொகை வாங்கப்பட்டது. அந்த தொகை அளவுக்கு வசூல் ஆகவில்லை என்பதை அறிந்த ரஜினிகாந்த் கூடுதலாக வாங்கப்பட்ட தொகையை திருப்பிக்கொடுத்தார். பாபா படம் ரஜினிகாந்த்தை பொறுத்தவரை லாபகரமான படமாகும்.

பாபா படத்தில் ரஜினிகாந்த் அடிக்கடி காட்டும் ‘பாபா’ முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 10 அன்று வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் சுமார் 130 திரைகளில் பாபா படத்திற்கான காட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது. படம் வெளியான அன்று தொடக்க காட்சிக்கு மட்டும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

அதன் பின்னர் திரையரங்குகளில் இரட்டை இலக்கங்களில் டிக்கெட் விற்பனை செய்வதே சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது.

புதிய திரையிடலுக்கு பாபா படத்தை புதிதாக மறுபடத் தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ‘மாயா மாயா ‘, ‘சக்தி கொடு’, ‘கிச்சு கிச்சு’ பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு படத்திற்கான சிறப்பு சப்தங்களில் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன.

2002 க்கு பின் பிறந்த இன்றைய இளம் தலைமுறையினருக்கு புதிய அனுபவமாக பாபா படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாபா படம் திரையரங்குகளில் வணிக அடிப்படையில் வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டு திரையரங்குகள் மூலம் ஒரு கோடி ரூபாய் மொத்த வசூல் ஆன நிலையில் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மழை நின்றபின்பு வசூல் அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்த திரையரங்குகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வசூலில் முன்னேற்றம் இல்லை பல திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டாலும் திரையரங்குக்கு படம் பார்க்க வரும் இளைய தலைமுறைக்கு பாபா படம்பிடிக்கவில்லை .அதையும் கடந்து தியேட்டர்களில் படம் பார்க்க வந்த இளைய தலைமுறையினர் ரஜினிகாந்த்தின் மூத்த ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் என கமெண்ட் செய்து செல்கின்றனர் என்கிறார்கள் தியேட்டர் வட்டாரத்தில்.

கடந்த நான்கு நாட்களில் தமிழ்நாடு திரையரங்குகளில் சுமார் ஒரு கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது பாபா திரைப்படம்.

இராமானுஜம்

அஜித்தை விட மாஸ் ஹீரோ விஜய் தான்: தில் ராஜூ கிளப்பிய திடீர் புயல்!

அரசு வேலை : டிஎன்பிஎஸ்சி கொடுத்த மெகா ஷாக்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.