அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெபெல். இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதை தொடர்ந்து ரெபெல் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. ரெபெல் படத்தின் மூலமாக ஜிவி பிரகாஷ் ஒரு பக்கா ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார் என்பது உறுதியானது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 01) ரெபெல் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “அழகான சதிகாரி” என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடகர் வேல்முருகன் இந்த பாடலை பாடியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
மிசோரம் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!