நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த Sci-Fi படம் “அயலான்”.
இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன், கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்பட்ட ஒரு ஏலியன் கதாபாத்திரமும் படம் முழுக்க இணைந்து நடித்துள்ளது. இந்தப் படத்தில் அதிக VFX ஷார்ட்ஸ் இருப்பதினால், எந்த குறையும் இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் உருவாக்க தான் இத்தனை ஆண்டுகள் ஆகி உள்ளது என படத்தின் இயக்குனர் ரவிக்குமாரும் நடிகர் சிவகார்த்திகேயனும் பல இடங்களில் கூறி இருக்கின்றனர்.
அயலான் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டு வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே மீண்டும் அந்த தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது. தற்போது இறுதியாக 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயலான் படத்தின் டீசர் இன்று(அக்டோபர் 6) வெளியாகி உள்ளது.
ஒரு சயின்டிஸ்டின் கண்டுபிடிப்பு, உலகிற்கு வரும் ஆபத்து, பூமியில் தரை இறங்கும் ஏலியன், அயன் மேன் அடியாட்கள் என மிரட்டலான கிராஃபிக்ஸுடன் அயலான் படத்தின் டீசர் அட்டகாசமாக தொடங்குகிறது. ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு டீசரில் பெரிதாக வசனங்கள் எதுவுமில்லாமல் சாதாரணமாக விட்டுவிட்டனர். டீசரின் இறுதியில் யோகி பாபுவும், கருணாகரனும் ஏலியனை டீல் செய்யும் விதம் செம்ம ரகளை.
அயலான் படம் பொங்கலுக்கு தான் வெளியாக போகிறது என்பதை டீசர் மூலமாகவும் உறுதிப்படுத்தி உள்ளது படக்குழு. ஆனால் எந்த தேதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்படவில்லை.
2024 ஆம் ஆண்டு பொங்கல் ரேஸில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் போன்ற படங்களும் இருப்பதால் அயலான் படம் தள்ளிப் போக அதிக வாய்ப்புள்ளது என சில தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அயலான் படக் குழுவினர் டீசரை வெளியிட்டு இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஏலியன்… கிராபிக்ஸ் காட்சிகளையெல்லாம் வைத்து பார்க்கும்போது அயலான் குழந்தைகள் கொண்டாடும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும் பொங்கல் பண்டிகை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யாருக்கு யார் போட்டி: அண்ணாமலைக்கு எடப்பாடி பதில்!
“சிவராஜ் குமார் மன்னிப்பை ஏற்க மாட்டேன்”: சித்தார்த் கருத்து!