ayalaan movie trailer jailer

அயலான் ஆசை நிறைவேறுமா?

சினிமா

சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத்சிங் உட்பட பலர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் அயலான்.

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கொரோனா பொது முடக்கம், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு நடத்த தாமதம் ஏற்பட்டது.

தற்போது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அயலான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் டீஸர் ஒன்று வெளியாகி இருந்தது. தற்போது புதிய டீஸர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ரெடி செய்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 10 அன்று ஜெயிலர் படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் புதிய டீஸரை திரையிட அயலான் பட தயாரிப்பு தரப்பு விரும்பியிருக்கிறது. இதற்கான வேலைகள் வேகமாக நடந்து வந்தாலும் டீஸர் வேலைகள் ஜெயிலர் வெளியீட்டுக்குள் முடிவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

நாளை நள்ளிரவு வரை டீஸரை ஜெயிலர் படத்துடன் இணைத்து அப்படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியிட அயலான் படக்குழு முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

இராமானுஜம்

டெல்லி மசோதா: அதிமுகவை தாக்கிய ஸ்டாலின்

“ஆட்சி மாறும் போது டெல்லி மசோதா திரும்ப பெறப்படும்” – கெஜ்ரிவால்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *