இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ரவிக்குமார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் “அயலான்” படம் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுபிரியா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்பட்ட ஒரு ஏலியனும் படம் முழுக்க நடித்திருக்கிறது.
அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அயலான் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரும் புதன் கிழமை ( டிசம்பர் 20) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செகண்ட் சிங்கிள் பாடலுக்கு “அயலா அயலா” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு ஏலியன் இசையமைப்பதை ஏ. ஆர். ரஹ்மானும் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அவசியமின்றி வெளியே வராதீங்க”: தென் மாவட்ட மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்!
மிதக்கும் தென் மாவட்டங்கள் : உதவிக்கு வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!
“மக்கள் வரலனாலும் வெளியேத்துங்க” : தூத்துக்குடி கலெக்டரின் அவசரக் குரல்!
”இந்த அளவிற்கு மேல் பெய்தாலே ரெட் அலர்ட் தான்”: தலைமை செயலாளருக்கு பாலச்சந்திரன் பதில்!