கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 12)வெளியான அயலான் படத்திற்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.
இதனால் குடும்பம், குடும்பமாக ரசிகர்கள் அயலான் படத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இது அயலான் படக்குழுவிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஏனெனில் இந்த படம் தொடங்கி 5 ஆண்டுகள் கழித்தே திரைக்கு வந்துள்ளது. கடைசி நேரத்திலும் கூட அயலான் படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன.
அத்தனை தடைகளையும் தாண்டி திரைக்கு வந்த அயலான், குழந்தைகளுக்கும் பிடித்த படமாக மாறியுள்ளது. முன்னதாக படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்த நிலையில், தற்போது திரையரங்குகளில் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
படம் பார்த்த அனைவருமே அயலான் படத்தின் விஎப்எக்ஸ் பணிகளை மனதாரப் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக குறைந்த பட்ஜெட்டிலேயே சர்வதேச படங்களைப் போன்ற தரம் அயலானுக்குக் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விஎப்எக்ஸ் இயக்குநர் பிஜோய் அற்புதராஜ்க்கு ஆளுயர மாலை அணிவித்து, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து ரவிக்குமார் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”அயலான் சர்வதேச விஎப்எக்ஸ் காட்சிகளின் பின்னணியில் இருக்கக்கூடிய நபர் இவர் தான். அவர் ஒரு இமாலய பணியைச் செய்து திரைப்படத்தை நமக்கு கொண்டு வந்துள்ளார்”, என பாராட்டி இருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்களும் உண்மையிலேயே படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் நன்றாக இருந்தன என, சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்லியில் பொங்கல் கொண்டாடிய மோடி
இளம் வீரரைப் பார்த்து கோபமாகக் கத்திய ரோஹித்… உண்மையில் என்ன நடந்தது?