நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான Sci-Fi திரைப்படம் அயலான். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஏலியன் கான்செப்ட்டை மையமாக கொண்டு வெளியான இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படம் உலகளவில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அயலான் படத்தின் 2 வது பாகம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 24) அயலான் படம் வெளியாகி இதுவரை உலகளவில் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
ஆளுநர் மாளிகை முற்றுகை: காங்கிரஸுடன் கைகோர்க்கும் கூட்டணி கட்சிகள்!
மாநாடு முடிந்து… உதயநிதி கூட்டும் திடீர் இளைஞரணிக் கூட்டம்! எதற்காக?
கீழக்கரை ஜல்லிக்கட்டு: மஹேந்திரா தார் ஜீப்பை தட்டிச்சென்ற அபிசித்தர்