இரவின் நிழலுக்கு விருதுகள் தொடரும்: பார்த்திபன்

சினிமா

இரவின் நிழல் படத்திற்கு 113 சர்வதேச விருதுகள் கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள படத்தின் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், இன்னும் வந்துகொண்டேயிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது நிறைய சர்ச்சைகளையும் எதிர்கொண்டது. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். உலக அளவில் ’முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்’ படமாக இந்தப் படம் உருவானதாக படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. திரையரங்குகளில் வெளியான பின்பு இரவின் நிழல் உலகின் முதல் நான் லீனியர்படம் இல்லை என்று திரைப்பட விமர்சகர் மாறன் ஆதாரங்களுடன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதற்கு பார்த்திபன் பதில் கூற நீண்ட விவாதமாக மாறியது. ஒருகட்டத்தில் குழாயடி சண்டை அளவுக்கு இருவரும் தரம் தாழ்ந்து சமூகவலைதளத்தில் வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில், இரவின் நிழல் அண்மையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்போது படம் உலகத்திலேயே இரண்டாவது ’நான் லீனியர் சிங்கிள் ஷாட்’ என குறிப்பிட்டனர்.

இதையடுத்து பார்த்திபன் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது படத்தின் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “Jaipur international film festival-லில் தேர்வு செய்யப்பட்ட 5 திரைப்படங்களில் ஒன்று ‘IN’! எண்ணிப்பார்க்க சிரமமாயிருந்ததால் 113-ஐ 115 என என் உதவியாளர் கூற, நானும் அதை மைக்கில் கூறிவிட்டேன். actually 113 international awards. இன்னும் வந்து கொண்டேயிருக்கிறது. IN making விரைவில் வரும்” என பதிவிட்டுள்ளார்.

இராமானுஜம்

ஜோடோ யாத்திரைக்கு சிக்கல்: ராஜஸ்தானில் முற்றும் கோஷ்டி மோதல்!

நெருங்கும் தேர்தல்: காங்கிரஸில் இணைந்த முன்னாள் அமைச்சர்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *