அவதார் 2: டிரைலர் இன்று வெளியீடு

அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் டிரைலர் இன்று (நவம்பர் 2) வெளியானது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார்.

மனிதர்களுக்கும், பண்டோரா எனும் வேற்று உலகத்தை சேர்ந்த நாவி மக்களுக்கும் இடையில் நடைபெறும் சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை.

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட அவதார் படத்தின் முதல் பாகம், உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது.

அதன் அடுத்தடுத்த பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் 2028 வரையில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சிகளுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

’அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ என்கிற இந்த இரண்டாம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியானது.

இந்தப் படத்தில் தண்ணீரை மையப்படுத்தி உருவாகியிருக்கும் காட்சிகள் மனதை கொள்ளையடிக்கச் செய்கின்றன. இதனால், மீண்டும் அவதார் வசூலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என திரையுலகினர் கருதுகின்றனர்.

ஜெ.பிரகாஷ்

ஸ்டாலின் கொடுத்த புத்தகம்: மலைத்துப் போன மம்தா

இரண்டு நாள் மழையில் இற்றுப்போன தமிழகம்: எடப்பாடி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts