‘கார்கி’ முதல் ‘கடாவர்’ வரை: இந்த வார ஓடிடி அப்டேட்!
திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற சில திரைப்படங்களும், நேரடி ஓடிடி திரைப்படங்களும் ஆகஸ்ட்-11 மற்றும் ஆகஸ்ட்-12 ஆகிய தேதிகளில் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன.
அவற்றின் முழு விபரம்:
அமேசான் ப்ரைம்:
பஹத் பாசில் நடிப்பில் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மலையன் குஞ்சு’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
விக்ரம் குமார் இயக்கத்கில் நாக சைதன்யா, ராஷி கண்ணா நடிப்பில் வெளியான ‘தேங்க்யூ’ அமேசான் ப்ரைமில் இன்று (ஆகஸ்ட் 12 ) வெளியாகியுள்ளது.
ஹாட்ஸ்டார்:
ராம்போத்தினி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘தி வாரியர்’ படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை அமலா பால் நடித்து தயாரித்துள்ள ‘கடாவர்’ படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இன்று (ஆகஸ்ட் 12 ) வெளியாகியுள்ளது.
கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கார்கி திரைப்படம் பல்வேறு தளங்களிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று (ஆகஸ்ட் 12 ) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட ‘சபாஷ் மிது’ நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் வூட் தளத்தில் இன்று (ஆகஸ்ட் 12 ) வெளியாகியுள்ளது.
இளம்நடிகர் மஹத், தேவிகா மற்றும் மானசா நடித்துள்ள ‘எமோஜி’ தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று (ஆகஸ்ட் 12 ) ) வெளியாகியுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 12ஆம் தேதியான இன்று ‘டே ஷிஃப்ட்’ ‘உடன் படோலஸ்’ ‘ஹரிக்காதே அல்லா கிரிக்காதே’ படம், ‘ஹோலிவூண்ட்’, ‘நாடிடோஷ்’, ‘ஸ்ரீமதி’ என பல்வேறு படங்களும் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன.
- க.சீனிவாசன்