ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பில் 1947 ஆகஸ்ட் 16 டீசர் வெளியீடு!

சினிமா

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று (ஆகஸ்ட் 15) வெளியிடப்பட்டது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது A.R.Murugadoss Productions நிறுவனத்தின் மூலம், Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘1947 ஆகஸ்ட் 16’. இந்த படத்தை இயக்குநர் முருகதாஸிடம் இணை இயக்குநராக இருந்த என்.எஸ்.பொன்குமார் இயக்கியிருக்கிறார்.

“இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல. ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்துகொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை” என்று சொல்லும் இயக்குநர் என்.எஸ்.பொன்குமார், இன்றைய சுதந்திர நாளில் படத்தின் டீசரை வெளியிட்டிருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இப்பட டீசரில், காதல் காட்சிகளுடன் உணர்ச்சி மிகுந்த தருணங்களும், தேசிய உணர்வும் அனைத்து இதயங்களையும் கவர்ந்திழுக்கின்றன. விரைவில் இப்படம் திரையில் வெளிவர இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

ஜெ.பிரகாஷ்

நயன்தாராவின் பார்சிலோனா புகைப்படம்: இணையத்தில் செம வைரல்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *