இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் அயலான். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைந்தது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த படத்தில் 4,500 VFX காட்சிகள் உள்ளதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைக்கான கால அவகாசம் இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
Get ready! #Ayalaan second single en route to you🛸👽
And releasing the music of Ayalaan at the grand audio launch on 26th December 🎶🔥
More updates to follow… 😎#AyalaanSecondSingle #AyalaanFromPongal #AyalaanFromSankranti
— KJR Studios (@kjr_studios) November 30, 2023
சமீபத்தில் அயலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பல தடைகளுக்குப் பிறகு பொங்கலுக்கு அயலான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாகும் என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.
அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக வெளியான “வேற லெவல் சகோ” பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்ததால் செகண்ட் சிங்கிள் பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள்!
தொடர்ந்து உயரும் பூண்டு விலை: காரணம் என்ன?
உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளை தரைமட்டமாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்!