நடிகர் அஜித்குமார் நடித்த விடா முயற்சி படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு, வெளிவந்த அஜித் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
பெரும்பாலும் அஜித் ரசிகர்கள் அரசியலை விரும்புவதில்லை. புதியதாக நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கியிருப்பதால், அவரின் ரசிகர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதாக பரவலாக குற்றச்சாட்டு உண்டு. இதற்கிடையே, நெல்லை ராம் தியேட்டரில் விடா முயற்சி படம் வெளியாகியிருந்தது.
படத்தை காண ஆயிரக்கணக்கான அஜித் ரசிகர்கள் குவிந்திருந்தனர். அப்போது, அங்கு வந்த இரு த.வெ.க தொண்டர்கள் தியேட்டரின் முன்பு தங்கள் கட்சி கொடியை ஆட்டியபடி உள்ளே செல்ல முயன்றனர்.
இதை பார்த்த அங்கிருந்த அஜித் ரசிகர் ஒருவர், த.வெ.க தொண்டர்களை தாறுமாறாக அடித்தார். கேள்வியே கேட்காமல் பிடறியிலேயே அடித்த அடியில் வலி தாங்க முடியாமல் விஜய் கட்சி தொண்டர்கள் தங்கள் உயிருக்கும் மேலான கட்சி கொடியை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
விஜய் ரசிகர்கள் ஒரே அடியில் அங்கிருந்து ஓடியதை கண்டு, அஜித் ரசிகர்கள் வாய் விட்டு சிரித்தனர். பலத்த கோஷமும் எழுந்தது.
படம் பார்க்க வந்தா அமைதியா பார்த்துட்டு போகனும். அதை, விட்டுட்டு இப்படி கட்சி கொடியை தூக்கிட்டு தியேட்டருக்குள்ள அரசியலை கொண்டு வர்றீங்க? என்பதே தாக்கிய அஜித் ரசிகரின் கருத்தாக இருந்தது.
அடி வாங்கிய விஜய் ரசிகர்கள், தலை தப்பியது தம்பிராண் புண்ணியம் என்கிற கதையாக அங்கிருந்து தப்பியோடி அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றுக்குள் பதுங்கியதாக தகவல்.