நடிகர் விஜய் இன்று(பிப்ரவரி2) தன்னுடைய அரசியல் வருகையை கட்சி பெயருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
இதையடுத்து #தமிழகவெற்றிகழகம் ஹேஷ்டேக் இந்தியளவில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தன்னுடைய 69-வது படத்துடன் விஜய் திரையுலகில் இருந்து விலகப்போகிறார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அவரது ரசிகர்கள் சற்று உற்சாகம் குறைந்து காணப்படுகின்றனர்.
விஜய்யை பொறுத்தவரை இது ஒரு நல்ல முடிவாக இருந்தாலும் கூட கேரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய் அதை துறந்து விட்டு, அரசியலுக்கு செல்வதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் அவரது 69-வது படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி தான் தற்போது சமூக வலைதளங்களை பெரிதும் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.
ஷங்கர், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், அட்லி, கார்த்திக் சுப்புராஜ் என முன்னணி இயக்குநர்கள் பலரின் பெயரும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது.
அதோடு டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யார் இயக்கினால் நன்றாக இருக்கும்? என வாக்கெடுப்பும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயின் கடைசி படத்தை கார்த்திக் சுப்புராஜ் அல்லது அட்லி இருவரில் ஒருவர் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் ‘ஜவான்’ படத்திற்கு பின்னர் விஜய்க்காக அட்லி காத்திருக்கிறார். மறுபுறம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வெற்றியால் கார்த்திக் சுப்புராஜும் ரேஸில் இருக்கிறார்.
இதனால் ‘தளபதி69’ படத்தினை இயக்கப்போவது யார்? என்பது விஜயின் கைகளில் தான் உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை வழக்கம்போல நாம் காத்திருக்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’: பின்னணியில் ரஜினியின் குட்டிக்கதை!
”இதெல்லாம் துரோகம்” டிராவிட்டோடு சேர்த்து பிசிசிஐ வறுக்கும் ரசிகர்கள்!
இப்போ நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம்