பெரிய ஹீரோ, பிரமாண்ட பட்ஜெட்… டோலிவுட்டில் ‘மாஸ்’ என்ட்ரி கொடுக்கும் அட்லி
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லி தற்போது தெலுங்கில் என்ட்ரி கொடுக்கத் தயாராகி இருக்கிறார்.
ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனால் இயக்குநர் அட்லி அடுத்ததாக யாரை இயக்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்தது.
அடுத்த படத்திற்காக மீண்டும் தன்னுடைய பேவரைட் ஹீரோ விஜயுடன், அட்லி இணைவார் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அட்லி டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தெலுங்கின் முன்னணி ஹீரோ அல்லு அர்ஜுனைத் தான் அட்லி இயக்கவுள்ளாராம். அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து திரிவிக்ரம், சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோரின் படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்த படங்களுக்கு பின்னர் தான் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறாராம். பெரிய பட்ஜெட் என்பதால் தற்போது அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் அட்லி ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில் பிற நடிக-நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி படத்திற்கு பின்னர் அல்லு அர்ஜுன் நெல்சன் திலீப்குமார் மற்றும் கொரட்டலா சிவா படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மிகவும் டைட்டாக இருப்பதால் இன்னும் 2 வருடங்களுக்கு அல்லு அர்ஜுனின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் என்னும் நிலை தற்போது உருவாகி உள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொதுத் தொகுதி கேட்கும் திருமா!
ஐபிஎல் மட்டும் தான் ஆடுவாரு போல… இளம்வீரரை வறுக்கும் ரசிகர்கள்