அட்லீயால் ஷாருக்கான் படத்துக்கு சிக்கல் : அதிர்ந்துபோன இந்தி சினிமா!

சினிமா

இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான ‘பேரரசு’ படத்தின் கதை என கூறி, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து, பின் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ குமார். இவர் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வெற்றி பெற்றது.

இந்த திரைப்படம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘மௌன ராகம்’ படத்தின் கதையின் நவீன வடிவம் என்று விமர்சிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து அட்லி இயக்கிய ‘தெறி’ திரைப்படம் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சூரியன்’ படத்தின் கதையின் மறுவடிவம் என்றும்

அதனை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் ‘மூன்று முகம்’ படத்தின் மறுவடிவம் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.

இப்படி சர்ச்சையில் சிக்கி வந்த அட்லீ இவை எவற்றுக்கும் நேரடியாக பதில் கூறியதில்லை. ஏனென்றால் மேற்கண்ட படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் வெளியான பின்புதான் பழையபடங்களின் மறுவடிவம் என தெரியவந்தது.

சம்பந்தபட்ட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் புகார் எதுவும் செய்யவில்லை. விமர்சனங்கள், சர்ச்சைகள் ஊடகங்களில் செய்தியாக வெளியானபோது நேரடியாக அட்லி பதில் கூறியது இல்லை.

‘பிகில்’ படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் முதல் அறிமுக நடிகர்கள் வரை கதை கேட்கவும் அவரது இயக்கத்தில் படம் தயாரிக்கவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை.

அத்துடன் அட்லியை இயக்குநராக ஒப்பந்தம் செய்யக்கூடாது என்பதை அறிவிக்கப்படாத சட்டமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தனது உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

அதனால் நீண்ட போராட்டம், முயற்சிகளுக்கு பின்னர் இந்திப்படம் இயக்கும் வாய்ப்பை சுமார் 4 வருடங்கள் கழித்து அட்லி பெற்றார்.

நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்துவரும் ‘ஜவான்‘ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என்று இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். 

Atlee stole the story from Vijayakanths film for Jaawan

‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார் . மேலும், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். முக்கியமான வேடத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார்

ஷாருக்கானுக்கு சரியான ஆன் ஸ்க்ரீன் ஜோடி என்றால் அது எப்போதுமே தீபிகா படுகோன் தான். ஓம் ஷாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் என இருவரும் இணைந்து நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.

இந்நிலையில், ஜவான் படத்தின் டீசரில் இணையத்தையே தீப்பிடிக்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் அவர் வரும் முதல் காட்சியே தெறித்தது. இப்படம் 2023 ஜனவரி 25 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயக்குநர் அட்லீ குமார் இயக்கிய அனைத்துப் படங்களுமே ஏதோவொரு படத்தின் கதை.. திருடப்பட்ட கதை.. காப்பியடிக்கப்பட்ட கதை என்று பல்வேறு பஞ்சாயத்துக்களைத் தாண்டித்தான் திரைக்கு வந்தன.

இந்தநிலையில், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தின் கதை விஜய்காந்த் நடித்த ‘பேரரசு’ திரைப்படத்தின் கதையை தழுவி இருப்பதாக கூறி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

2006-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான ‘பேரரசு’படம்

துப்பறியும் கதையை அடிப்படையாக கொண்டது. இதில் காசிவிஸ்வநாத், பேரரசு என இரட்டை வேடங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார். எட்டு கோடி ரூபாய் செலவில் தயாரான பேரரசு படம் 14 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்யப்பட்டு வெற்றிபெற்றது. படத்தைஅறிமுக இயக்குநர் உதயன் இயக்கி இருந்தார்.

பேரரசு திரைப்படத்தை ரோஜா கம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த நிறுவனத்திற்கு மாணிக்கம் நாராயணன் பைனான்ஸ் கொடுத்திருந்தார். ரோஜா காம்பைன்ஸ் நிறுவனம் தனது பட உரிமைகளை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் விற்றுவிட்டது.

இந்தசூழலில் அட்லீ மீதான புகார் குறித்த விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு மேல் நடத்த தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தொடர்ச்சியாக தென்னிந்திய மொழியில் தயாரிக்கப்பட்ட படங்கள் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதல் இடத்தில் இருந்து வருகின்றன கொரோனாவுக்கு பின் இந்தி திரைப்படங்கள் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் தடுமாற்றம் அடைந்து சரிவை சந்தித்து வருகின்றன

இந்த நிலையில் அமீர்கானின்  லால் சிங் சத்தா இந்தி திரையுலகை காப்பாற்றும் என நினைத்தது ஏமாற்றத்தில் முடிந்தது. ஷாருக்கானின் ஜவானை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தி சினிமா உலகம் அட்லி குமார் மீது கொடுக்கப்பட்டிருக்கும் கதை திருட்டு குற்றச்சாட்டால் அதிர்ந்துபோய் இருக்கிறது.

இராமானுஜம்

சென்னையில் சோகம்: மின்சாரம் தாக்கி தம்பதிகள் உயிரிழப்பு!

T20 Worldcup 2022 : அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *