‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் எம். ராஜேஷ். அதன் பிறகு அவரது இயக்கத்தில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்கள் மெகா ஹிட் அடித்தன.
அந்த படங்களுக்கு பிறகு இவர் இயக்கிய எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் நடிகை ஹன்சிகாவை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு இவர் இயக்கிய MY 3 என்ற வெப் சீரிஸும் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கவில்லை.
தற்போது நடிகர் ஜெயம் ரவியை வைத்து ‘பிரதர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் ராஜேஷ். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே ராஜேஷின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
எம். ராஜேஷின் அடுத்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். இந்த படம் இயக்குனர் எம். ராஜேஷின் ஸ்டைலில் நகைச்சுவையாக மட்டுமின்றி அதர்வாவிற்கு ஏற்றது போல ஒரு பக்கா ஆக்ஷன் படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
‘விருமன்’, ‘மாவீரன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகை அதிதி இயக்குநர் விஷ்ணுவர்தன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி தான் ஹீரோவாக நடித்து வருகிறாராம்.
மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘புறநானூறு’ படத்திலும் அதிதி நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கூடிய விரைவில் ராஜேஷ் – அதர்வா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவுள்ளன.
நீண்ட காலமாக ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நடிகர் அதர்வாவுக்கும், இயக்குநர் ராஜேஷுக்கும் இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமையுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…