ஓடிடி-யில் வெளியாகும் ‘ப்ளூ ஸ்டார்’ வெளியீட்டு தேதி இதுதான்!

Published On:

| By Manjula

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது தெரியவந்துள்ளது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான படம் ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன் – சாந்தனு என இருவரும் நாயகர்களாக நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களுடன், நல்ல வரவேற்பினையும் பெற்றது.

கிரிக்கெட்டை மையமாகக்கொண்டு வெளியானாலும் சாதிய ரீதியிலான வேற்றுமை, காதல், பகை, நகைச்சுவை என சரிவிகிதத்திலான திரைக்கதையினை இயக்குநர் ஜெயக்குமார் அமைத்து இருந்தார். அதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் இசையில் வெளியான ‘ரயிலின் ஒலிகள்’ பாடல் பாரபட்சம் பாராமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரிபீட் மோடில் கேட்க வைத்தது. இதனால் இன்ஸ்டாகிராமிலும் அதிகபட்ச ரீல்ஸ்கள் இப்பாடலை வைத்து உருவாகின.

கடந்த ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இன்னும் கூட சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத்தேதி தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி டென்ட்கொட்டா  ஓடிடி தளத்தில் நாளை (பிப்ரவரி 29) இப்படம் வெளியாகிறது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சோழிங்கநல்லூர் – சிறுசேரி இடையிலான… 2-ம் கட்ட மெட்ரோ திட்டப்பணி எப்போது தொடங்கும்?

ஸ்டிக்கர் ஒட்டுவது யார்?: மோடிக்கு கனிமொழி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share