blue star movie twitter review

ப்ளூ ஸ்டார் : ட்விட்டர் விமர்சனம்!

சினிமா

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று (ஜனவரி 25) வெளியாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் நிலவும் சாதி அரசியல், அதனால் ஏற்படும் மோதலை அனைவரும் எளிதாக புரிந்துகொள்ளும்படி படத்தில் காட்சிகளை அடுக்கியுள்ளார் ஜெயக்குமார். மேலும் அதற்கான தீர்வையும் ரசிக்கும்படி அவர் சொல்வது சமூகத்தின் மீதான அவரது பொறுப்பை எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும் அசோக் செல்வன் உடனான காதல் காட்சிகளில் கீர்த்தி பாண்டியனும், தங்களுக்கான கதாப்பாத்திரத்தில் பகவதி பெருமாள் மற்றும் லிசி ஆண்டனி ஆகியோர் கவனம் சேர்க்கின்றனர்.

மேலும் படத்தினை  நகர்த்தும் கருவியாக இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ப்ளூ ஸ்டார் படம் குறித்து ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்!

ஜிவி பிரகாஷின் மாஸ் வசனம்.. “ரெபெல்” ரிலீஸ் தேதி இதுதான்..!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *