Ashok Selvan - Keerthy Pandian Duet Song

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியனின் டூயட் சாங்!

சினிமா

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ப்ளூ ஸ்டார்.

இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன், இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள், பிரித்விராஜன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கோவிந் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரயிலின் ஒலிகள் என்ற பாடல் ஏற்கனவே பலரது ஃபேவரைட் பாடலாக மாறி விட்டது.

இந்த படம் நாளை (ஜனவரி 25 ஆம் தேதி) வெளியாக உள்ள நிலையில் இன்று (ஜனவரி 24) ரயிலின் ஒலிகள் பாடலின் வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த பாடல் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் இருவருக்குமான டூயட் சாங் ஆக அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

INDvsENG : பாகிஸ்தான் வம்சாவளி வீரருக்கு வந்த சிக்கல்… ஸ்டோக்ஸ் விரக்தி!

இந்தியாவில் அறிமுகமானது Hero Xtreme 125R… கலர், விலை, சிறப்பம்சங்கள் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *