பல தமிழ் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி தன்னுடைய 60 வயதில், 2-ஆவது திருமணம் செய்துள்ளார்.
இந்தி திரைப்படத்தின் மூலம் கடந்த 1991 ஆம் ஆண்டு குணச்சித்திர நடிகராக அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி, தமிழில் தில், பாபா, ஏழுமலை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தார். இதில் அவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர் இன்று(மே25) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

திருமண நிகழ்வில் ரூபாலி அசாம் மாநிலத்தின் பிரத்யேக பட்டுத் துணியாலான வெள்ளை மற்றும் தங்கநிற மேகேலா சடோர் அணிந்திருந்தார். ஆஷிஷ் வித்யார்த்தி கேரளாவின் முண்டு அணிந்திருந்தார்.
தனது 60-வது வயதில் இரண்டாவதாக திருமணம் செய்தது குறித்து பேசிய ஆஷிஷ் வித்யார்த்தி, “ரூபாலியை திருமணம் செய்திருப்பது மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது. காலையில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். அதனைத் தொடர்ந்து விருந்து நிகழ்வு நடந்தது” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
234 தொகுதிகளிலும்… விஜய்யின் அடுத்த மூவ்!
புதிய பயிற்சி ஜெர்சியை வெளியிட்ட பிசிசிஐ!
பல்லு உள்ளவன் பக்கோடா தின்னுறான்…