திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வதற்காக நாங்கள் சிலரின் உதவியை நாடினோம் என்று நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60-வது வயதில் ரூபாலியை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டது.
இந்தநிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்தும் முதல் மனைவி ரஜோஷி பருகா பிலோவை விவாகரத்து செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும் இந்தியா டுடே செய்தி தொலைக்காட்சிக்கு ஆஷிஷ் வித்யார்த்தி நேர்காணல் அளித்துள்ளார்.
அதில் ஆஷிஷ் வித்யார்த்தி கூறும்போது, “22 வருட திருமண வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. எங்களது கடமைகளை நிறைவேற்றியுள்ளோம்.
ஆனால் கடந்த சில வருடங்களாக நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள நினைத்தோம். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இயல்பாகவே நிறைய விஷயங்களை பேசுவோம்.
அந்தவகையில் தான் எங்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகளை அறிந்துகொண்டோம். இது தொடர்ந்தால் பிரச்சனைகள் அதிகமாகும் என்பதை உணர்ந்தோம். அதனால் சிலரின் உதவியை நாடினோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதனால் விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.
நான் விவாகரத்து முடிவு எடுக்கும்போதே தனியாக வாழ விரும்பவில்லை என்பதில் தெளிவாக இருந்தேன். இதனை பிலோவிடமும் தெரிவித்துவிட்டேன். எங்களது திருமண அத்தியாயம் முடிந்தவுடன் வெவ்வேறு பாதைகளை இருவரும் தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ரயில் விபத்து… சிதறி கிடந்த காதல் கடிதம்: இதயத்தை நொறுக்கும் வரிகள்!
இணையத்தை கலக்கும் பிரியங்கா சோப்ரா நடனம்!