தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனான நடிகர் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஆகஸ்ட் 22) வெளியாகியுள்ளது.
இதனை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தின் விநியோக உரிமை வாங்கியுள்ளது.
மிருதன், டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சக்தி சவுந்தர ராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கிஷோர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
ட்ரைலரைப் பார்க்கும் போது, ஆர்யா இந்திய ராணுவ கேப்டன் வெற்றிச் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராணுவம் மற்றும் சயின்ஸ் பிக்சன் கதைக் களத்தில் இப்படம் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓர் அடர்ந்த காட்டில் ஏலியன்கள் வசிப்பதாகவும், அந்த இடத்திற்குச் சென்ற யாரும் திரும்ப வராததாகவும் வசனங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்படத்தில் ஏலியன்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
செல்வம்
ஆர்யா நடிக்கும் கேப்டன் முதல் பார்வை!