தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக, டாப் நடிகர் ஒருவரை படக்குழு லாக் செய்துள்ளது.
கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, முக்கிய வேடங்களில் சத்யராஜ், ஆனந்தராஜ் நடித்து வருகின்றனர்.
அடுத்ததாக ’96’ புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். தற்போது மதுரையில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு ‘மெய்யழகன்’ என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதோடு கார்த்திக்கு வில்லனாக, நடிகர் அரவிந்த் சாமியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ள விவரமும் தெரிய வந்துள்ளது.
கார்த்தி ஜோடியாக ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியல் புகழ் சுவாதி கொண்டே நடிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்து அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் செல்ல தடை!
வான்வெளி, பாதுகாப்பு, மருத்துவ துறை : ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!