ஆடியில் அருண்ராஜா வாங்கிய ஆடி கார்!
தமிழ் சினிமாவின் நடிகரும் , இயக்குனருமான அருண்ராஜா காமராஜ் தற்போது ஆடி கார் வாங்கியுள்ளதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவராக தமிழ் திரையுலகில் வலம் வந்துக் கொண்டிருப்பவர் அருண்ராஜா காமராஜ்.
பெண்களின் கிரிக்கெட் பற்றி இந்தியாவிலேயே முதல் முதலில் படம் எடுத்த இயக்குனர் என்கிற பெருமையோடு, இவர் இயக்கிய ‘கனா’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனுக்கும் லாபத்தை பெற்று தந்தது.
இந்த படத்திற்கு பின்னர், சமீபத்தில் நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ என்கிற படத்தை இயக்கினார். இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமான ஆர்டிகள் 15 ரீமேக்காக எடுக்கப்பட்ட இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது.
தற்போது ‘அமெரிக்கன் மாப்பிள்ளை’ என்கிற வெப் தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது அருண்ராஜா காமராஜ் புதிதாக ஆடி கார் வாங்கியுள்ளார். தனது தாயாருடன் ஆடி காருக்கு அருகில் நின்று அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அருண்ராஜா காமராஜிற்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்-