பாலாவின் ‘வணங்கான்’ ரிலீஸ் எப்போது?

Published On:

| By Selvam

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் 2025-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு இன்று (நவம்பர் 19) அறிவித்துள்ளது.

தமிழ் சினிமா இயக்குனர்களின் மிகவும் தனித்துவமானவர் பாலா. இவரது படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வணங்கான்’. பி ஸ்டூடியோஸ், வி ஹெளஸ் புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘வணங்கான்’ படத்தின் டிரைலர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. டிரைலர் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகளால் நிரம்பியிருந்தது. ரசிகர்கள் மத்தியில் ‘வணங்கான்’ டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தநிலையில், அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘வணங்கான்’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “தித்திக்கும் உங்களின் இப்பிறந்த நாளில் பொங்கலுக்கு ‘வணங்கான்’ வெளியீடு என்ற கரும்பின் சுவையைப் பரிசாகத் தருகிறோம். மகிழ்ச்சியின் இனிப்பு மனதாரப் பரவி, புன்னகை என்றும் எங்கும் வழிந்தோடி, வெற்றியின் பிள்ளைகளைத் தாலாட்டி வென்று வாழ இயற்கையும், இறையும் துணை புரியட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அருண் விஜய்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை) 

கீர்த்தி சுரேஷ் கல்யாணம் கட்டும் ஆண்டனி தாட்டில் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share