விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான தங்கலான் படத்துடன் நேரடியாக களமிறக்கப்பட்ட டிமான்டி காலனி 2 இரண்டாவது நாள் காட்சிகள் அதிகரிக்கப்பட்டது.
பெரும்பான்மையான திரையரங்குகளில் தங்கலான் திரையிடப்பட்டிருந்ததால் டிமான்டி காலனி படத்திற்கு தேவை இருந்தும் திரையரங்குகள் கிடைக்கவில்லை.
தங்கலான் படத்தின் வசூல் சரிவை நோக்கி சென்றதால் முதல்வார முடிவில் 50% திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு டிமான்டி காலனி-2, வாழை, கொட்டுக்காளி, போகுமிடம் வெகு தூரமில்லை போன்ற புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது.
அருள்நிதி நடிப்பில் 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமான்டி காலனி. ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து எட்டு வருடங்கள் கழித்து ‘டிமான்டி காலனி ‘ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் முதல் வாரத்தில் 275 திரைகளில் வெளியான ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் தற்போது 350க்கும் அதிகமான திரைகளாக அதிகரிக்கப்பட்டு இரண்டாவது வாரம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதாக படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவீஸ் அறிவித்துள்ளது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!
முழுமையான நிறைவான வாழ்க்கை என்றால் என்ன?
டாப் 10 நியூஸ்: முத்தமிழ் முருகன் மாநாடு முதல் ஆளுநர் டெல்லி பயணம் வரை!