‘டிமான்ட்டி காலனி 2’ ரிலீஸ் எப்போது?

சினிமா

டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகராக இல்லை என்றாலும், அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் தனக்கு என்று ரசிகர் வட்டத்தை வயது வித்தியாசம் இன்றி கொண்டு இருப்பவர் நடிகர் அருள்நிதி.

அடிதடி, ஆக்க்ஷன், காதல், டூயட் என கதாநாயகர்கள் பயணிக்க இவற்றில் இருந்து ஒதுங்கி கதாநாயகன் என்கிற வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் கனமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அருள்நிதி.

அப்படிப்பட்ட ஒரு படம்தான் கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.

ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து  எட்டு வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி ‘ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு ‘டிமான்ட்டி காலனி 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி  வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து  டிரெய்லரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தினை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

-இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர்: டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே நீர் திறக்க வாய்ப்பு!

புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் : பயணிகள் மகிழ்ச்சி!

பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கான சன்ஸ்கிரீன்… பயன்படுத்துவது எப்படி?

ஹெல்த் டிப்ஸ்: திடீர் மயக்கத்துக்கு இனிப்பு சாப்பிடுவது சரியானதா?

+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *