அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்த படம் டிமான்ட்டி காலனி.
சென்னையில் உள்ள டிமான்ட்டி காலனி என்ற பகுதியை மையப்படுத்தி ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் வெளியானதால், படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த ஏரியாவில் உண்மையாகவே பேய் உள்ளதா இல்லையா என்பதை ஆராய டிமான்ட்டி காலனிக்கு நேரில் செல்ல தொடங்கிவிட்டனர்.
அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்துக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள், கோப்ரா படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைத்திருந்தாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதன் பிறகு டிமான்ட்டி காலனி 2 படத்தை இயக்க போவதாக அஜய் ஞானமுத்து அறிவித்தார்.
டிமான்ட்டி காலனி முதல் பாகத்தில் நடித்த அருள்நிதி அவர்களே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். BTG யுனிவர்சல், அஜய் ஞானமுத்து பட்டறை, மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து டிமான்ட்டி காலனி 2 படத்தை தயாரித்துள்ளது. சாம் CS இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது டிமான்ட்டி காலனி 2 படத்தின் ட்ரெய்லர் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விபத்தில் சிக்கிய விஷால் படக்குழுவினர்!