கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் இன்று (ஜனவரி 6) ஒன்று திரண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை ரேஸ் கோர்ஸில் இன்று’கலைஞர் 100’ விழா என்ற பெயரில் கலைநிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியுள்ளது.
இதில் நடிகர்களை பொறுத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, டி.ராஜேந்தர், வடிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நடிகைகளை பொறுத்தவரை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஆந்திரா அமைச்சர் ரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
எனினும் தமிழ்சினிமாவின் உச்சநட்சத்திரங்களான அஜித், விஜய் இருவரும் கலைஞர் 100 விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கம் என்ன? : டி.ஆர்.பி.ராஜா விளக்கம்!
மன அழுத்தத்தை எதிர்கொள்கிறேன்: இலியானா