ஆம்ஸ்ட்ராங் கொலை… சென்னையை பார்த்தாலே பயமா இருக்கு… அனிதா சம்பத் ஷாக் வீடியோ!

Published On:

| By indhu

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான செய்தியை கேட்டதில் இருந்து சென்னையை பார்ப்பதற்கே பயமாக உள்ளது என நடிகை அனிதா சம்பத் இன்று (ஜூலை 6) கூறியுள்ளார்.

பெரம்பூரில் நேற்று (ஜூலை 5) இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று (ஜூலை 6) நடிகை அனிதா சம்பத் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார்.

அதில், “நான் சிறு வயதில் இருந்தே பெரம்பூரில் தான் வசித்து வருகிறேன். வீட்டிற்கு வரும்போது எல்லாம் எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். ஆனால், இப்போது நம் ஊரை பார்ப்பதற்கே எனக்கு மிகவும் பயமாக உள்ளது. இரவு ஆம்ஸ்ட்ராங் சார் குறித்த செய்தியை கேட்டதிலிருந்து சென்னையை பார்ப்பதற்கு மிகவும் பயமாக உள்ளது.

அவ்வளவு பெரிய ஒரு தலைவர்.. ஒரு தேசிய கட்சியின் தலைவர்.. அவரை ஒரு ஆறு பேர் வெட்டி போட்டுட்டு போயி இருக்காங்க. அவரை இழந்தாச்சு அதுவே அநியாயமான விஷயம். மனசு பதறுது. அடுத்து என்னன்னா இதுக்கு பிறகு ஒரு ஆறு பேரை கைது பண்ணி அவர்களை காட்டுவார்கள். அதுவாவது நிஜமா அவரை வெட்டுனவங்க ஆறு பேரு தானா இல்லனா வேற யாராவது ஆறு பேரை கூட்டிட்டு வந்து சரண்டர் பண்ண வைப்பாங்களான்னு இன்னொரு பக்கம் பயமா இருக்கு.

எப்படி இதை நம்புவது? ஒருவேளை இவங்க கைது பண்ணுனாகூட இவங்க தான் ஆம்ஸ்ட்ராங்க வெட்டி கொன்னது என்று எப்படி நம்புவது? இவ்வளவு பிளான் பண்ணி கொலை செஞ்சிருக்காங்க. அவர் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாரு. இப்படி பிளான் போட்டு இருக்காங்கன்னா அவங்க ரொம்பவே யோசிச்சு தானே இப்படி பண்ணி இருக்கணும்?

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செஞ்சா செய்திகள் வரும்… பெரிய விஷயமா ஆகும்னு தெரிஞ்சு இப்படி பண்ணி இருக்காங்கன்னா எந்தவித பிளானும் இல்லாமையா இப்படி பண்ணி இருப்பாங்க?

மகாராஜா என்று ஒரு படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் ஒரு குப்பை தொட்டி காணாமல் போகும். ஆனால் அது ஒரு குப்பைத்தொட்டி என்பது சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனாலும் அந்த படத்தில் போலீஸ் ஆக இருக்கும் நட்டி ஒவ்வொரு அக்யூஸ்டுக்காக போன் பண்ணி நீ இந்த தப்பை ஒத்துக்கிறியா என்று கேட்பார்.

இது படத்தில் வரும் காட்சி மட்டுமல்ல, இது போல நிஜத்தில் நடக்கிறது. அதனால் தானே படத்துல வச்சிருக்காங்க. சின்ன கேஸுக்கு யாரோ பண்ணுனதுக்கு ஆள் கிடைக்கவில்லை என்று சொல்லி யாரோ ஒத்துக்க போறாங்கன்னா இவ்வளவு பெரிய கேஸ் முன்னாடியே பிளான் பண்ணி மர்டர் பண்ணி இருப்பாங்க அப்போ அதுல ஒரு ஆறு பேரை சரண்டராக வைக்கலாம்னு பிளான் பண்ணாமலா இவ்வளவு பெரிய கொலையை பண்ணி இருப்பாங்களானு மனசு பதறுது.

நிஜமாவே கொலைகாரங்கன்னு ஆறு பேரை கூட்டிட்டு வந்தா கூட மனசு நம்ப மாட்டேங்குது. ஆம்ஸ்ட்ராங் பெரிய கட்சியில் இருந்திருக்காரு பக்கத்தில் சுற்றி அத்தனை பேர் இருந்திருப்பாங்க.

அவருக்கே இந்த நிலைமைனா சாதாரணமாக வீட்டில் இருக்கிறவங்க, சிங்கிள் பேரன்ட்டா இருக்கிறவங்க, வயசானவங்க மட்டும் தனியா இருக்கிறங்க இவங்க எல்லாம் இனி எப்படி வாழுவாங்க? பெரிய ஆள்களுக்கே இந்த நிலைமைனா எங்களை மாதிரி சாதாரண மக்களின் நிலைமை என்ன? இது மேலும் பெரிய அச்சத்தை தான் கொடுக்குது.

ஆட்டோ, டூவீலரில் போனால் காவல்துறையினர் அவ்வளவு செக் பண்றாங்க. ஆனால் கத்தி வச்சிக்கிட்டு பைக்ல வந்து இருக்காங்க அவங்கள யாரும் செக் பண்ண மாட்டாங்களா? அப்போ சின்ன சின்ன விஷயத்தை மட்டும் தான் இங்க பெருசா பாப்பாங்களா? பெரிய விஷயத்தை அலட்சியமா விட்டுருவாங்களா? இப்போ ஒரு உசுரு போயிடுச்சு.

இதனால இன்னுமும் மக்கள் மத்தியில் பயம்தான் அதிகமாகுது” என்று அனிதா சம்பத் பேசி உள்ளார். இந்த

வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்து

செய்திகளை ஐ பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இறுதிப் பட்டியல் தயார்… இனிமேல் கோவை மேயராக வரப் போகிறவர் யார்?

“சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல” : திருமா, செல்வப்பெருந்தகை பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel