விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருவது யார்? என்னும் கேள்வி தான் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது.
துணிவு படத்திற்கு பின் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் நாயகிகளாக திரிஷா, ரெஜினா இருவரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முழுவீச்சில் நடைபெற்றது. இதையடுத்து மொத்த படக்குழுவினரும் படப்பிடிப்புக்காக தற்போது துபாய் சென்றுள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக அர்ஜுன் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக அஜித்தின் 50-வது படமான மங்காத்தாவில் அஜித்-அர்ஜுன் இணைந்து நடித்திருந்தனர்.
இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன. மறுபுறம் ஆரவ் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது சஞ்சய் தத்தும் விடாமுயற்சியில் நடித்து வருகிறார்.
இதனால் ஆரவ், அர்ஜுன், சஞ்சய் தத் மூவரில் அஜித்துக்கு ஒரிஜினல் வில்லன் யார்? இல்லை மூன்று பேருமே அவருக்கு வில்லனாக நடிக்கிறார்களா? என்ற கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
இன்றும் நாளையும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?
IndVsNz: மீம்ஸ் போட்டு கொண்டாடும் ரசிகர்கள்!
இதுக்கெல்லாம் கட்டணமா?: வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அதிர்ச்சி!