கமல் வசனத்துக்கு கவுண்டர் கொடுத்த அர்ஜுன் தாஸ்!

சினிமா

மௌன குரு, மகாமுனி போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் சாந்தகுமார். இவர் இயக்கிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் இயக்கிய மௌன குரு படத்தை தான் “அகிரா” என்ற பெயரில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் ரீமேக் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் சாந்தகுமார் புதிய கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ரசவாதி’ – The Alchemist’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடிக்க அவருடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். ‘ரசவாதி’ படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

டீசர் முழுக்க எந்த வசனங்களும் இல்லாமல் பின்னணி இசை மட்டுமே இடம்பெற்று இருந்தது,

அதேபோல் தற்போது டிரைலரின் தொடக்கத்தில் “என்ன பெரியவரே எத்தனை தலைமுறையா இங்க நின்னு எங்கள வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க” என்ற வசனம் இடம்பெற்று உள்ளது.

அதன்பிறகு டிரைலரில் வரும் காட்சிகள் அனைத்தும் வசனம் இல்லாமல் பின்னணி இசையுடன் மட்டுமே ஓடிக் கொண்டிருக்க இறுதியில் “பயம் இல்லாம நடிக்கிறதுதான் வீரம்னு உங்க வீட்டுல சொல்லிக் கொடுத்திருக்காங்களா?

எங்க வீட்டுல சண்டையில சாகறதுதான் வீரம்’ன்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க…” என்று மாஸ் ஆன வசனத்தை அர்ஜுன் தாஸ் பேசிவிட்டு தனது எதிரியை அடிப்பது போன்று அந்த டிரைலர் முடிகிறது.

குருதிப்புனல் படத்தில் நடிகர் கமல் ஹாசன் “வீரம்னா என்ன தெரியுமா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது தான்” என்ற வசனத்தை பேசி இருப்பார்.

அந்த வசனத்திற்கு இத்தனை ஆண்டுகள் கழித்து கவுண்டர் கொடுக்கும் விதமாக இந்த டிரைலர் அமைந்திருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வரும் மே 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: போலி தயாரிப்புகள்… கண்டுபிடிப்பது எப்படி?

ஈரான்-இஸ்ரேலிய மோதல் மற்றுமொரு சூயஸ் கால்வாய் நெருக்கடியா?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : சிக்கன் ரைஸ் பால்ஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *