சைலன்டாக இந்திப் படத்தில் நடித்து முடித்த அர்ஜூன் தாஸ்

Published On:

| By Kavi

சைலன்டாக இந்திப் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் நடிகர் அர்ஜுன் தாஸ். “அங்கமாலி டைரீஸ்” என்ற மலையாள திரைப்படத்தின் இந்தி ரீமேக் படம் தான் அது.

கைதி, அந்தகாரம், மாஸ்டர் என வரிசையாக தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் அர்ஜுன் தாஸ். ”புத்தம் புது காலை விடியாதா” என்ற ஆந்தாலஜியில் அர்ஜுன் தாஸ் – லிஜோமோல் ஜோடியை வைத்து ‘லோனர்ஸ்’ எனும் கதை இயக்கப்பட்டிருக்கும்.

அதன் பின்னர், அர்ஜுன் தாஸ் நாயகனாக அறிமுகமான படம் இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய “அநீதி”. இந்நிலையில் மற்ற படங்களுக்கான வாய்ப்பு அர்ஜுன் தாஸை தேடி வரத் தொடங்கியது. மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கப்பேலா’ என்ற படத்தின் ரீமேக்கில் நடித்தார் அர்ஜுன் தாஸ்.

அவரது ஃபிலிமோகிராபியில் இணைந்த படம் ‘போர்’. இதனைத் தொடர்ந்து மெளனகுரு, மகாமுனி படங்களின் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ‘ரசவாதி’ என்ற படமும் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது. தற்போது அர்ஜுன் தாஸ், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்து வருகிறார்.

இந்த பக்கம், தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வரும் ‘OG’படத்திலும் நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ். இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, சைலன்டாக இந்திப் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் அர்ஜுன் தாஸ். ‘அங்கமாலி டைரீஸ்’ என்ற மலையாள படத்தின் இந்தி ரீமேக்தான் அது.

இந்த படத்தை ‘கேடி (எ) கருப்புதுரை’ படத்தின் இயக்குநர் மதுமிதா இயக்கி உள்ளார். முன்னதாகவே, இந்த படம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் பத்திர நிதி: அதிமுகவுக்கு ரூ.5 கோடி கொடுத்த சிஎஸ்கே அணி நிர்வாகம்!

எலெக்‌ஷன் ஃபிளாஷ்: ஸ்டாலினுக்கு சாதகமான அதிகாரிகள்… அதிமுக தயாரிக்கும் பட்டியல்!

தேர்தல் பத்திர நிதி : திமுக யார் யாரிடம் எவ்வளவு பெற்றது? – பட்டியல் இதோ!

ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்ல தடை : இதுவரை பறக்கும் படை பறிமுதல் செய்தது எவ்வளவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share